திருப்பூர்: பொது பாதை ஆக்கிரமிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையீடு

திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பூங்கா நகரில் பொது பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பூங்கா நகர் பகுதியில் உள்ள பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பாதையை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இப்பகுதியில் அரசு வழங்கிய புறம்போக்கு நிலத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடியிருப்பு பகுதிக்கு செல்ல ஒரே ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளது. இந்நிலையில், இந்த சாலைக்கு எதிர்புறத்தில் உள்ள தனியார் குடியிருப்பைச் சேர்ந்த அமுதா, நாகலட்சுமி, லட்சுமி உள்ளிட்டோர் இந்த ஒரே வழிப்பாதையையும் ஆக்கிரமிப்பு செய்து, மற்றவர்களுக்கு பயன்படுத்த அனுமதி மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.



தங்களுக்கு அடிப்படை தேவையான சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...