கோவை ஆனைகட்டி சாலையில் செங்கல் சூளை புகைப்போக்கி சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கோவையில் கன மழை காரணமாக சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையின் 100 அடி உயர புகைப்போக்கி சரிந்து விழுந்ததால் ஆனைகட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், சின்னத்தடாகம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள செங்கல் சூளையில் இருந்த புகைப்போக்கி உடைந்து கோவை ஆனைகட்டி சாலையில் விழுந்தது. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை ஆனைகட்டி சாலை, தடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த பல்வேறு செங்கல் சூளைகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.



இந்நிலையில், தண்ணீர் பந்தல் அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் இருந்த சுமார் 100 அடி உயரம் கொண்ட புகைப்போக்கி திடீரென உடைந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த உடனேயே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விழுந்த புகைப்போக்கியை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக கோவை ஆனைகட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இப்பகுதியில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட புகைப்போக்கிகள் தற்போது செயல்படாத நிலையில் உள்ளன. இவை சேதமடைவதற்குள் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் இரண்டு நாட்கள் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மேலும் புகைப்போக்கிகள் சரியும் அபாயம் இருப்பதால், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...