உடுமலை பஞ்சலிங்க அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருகிறது.



இதன் காரணமாக இன்று காலை 9 மணி அளவில் பஞ்சலிங்க அருவியில் தடுப்புகளைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோயில் நிர்வாகம் தற்போது அருவியில் குளிக்க தடை விதித்துள்ளது. மேலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோயில் ஊழியர்கள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...