கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் மழைநீர் வடிகால், சாலை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு எம்எல்ஏ PRG. அருண்குமார் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார் கலந்து கொண்டார்.



பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கஸ்தூரிநாய்க்கன்பாளையம் 1-வது வார்டு மருதமலை அடிவாரம் சிவசாமி விபூதி ஸ்டோர்ஸ் அருகில் ரூ.8,20,000 மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.



இதேபோல், கஸ்தூரிநாய்க்கன்பாளையம் வார்டு 11-ல் ரூ.6,70,000 மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.



நச்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சோமையனூரில் ரூ.14,00,000 மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடத்தப்பட்டது.



மேலும், பன்னீர்மடை ஊராட்சி, தாலியூர் N.A.M நகர் பகுதியில் ரூ.9,95,000 மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பெருந்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





இதனிடையே, பன்னீர்மடை ஊராட்சி, கஸ்தூரி நாயக்கன் புதூர் பகுதியில் நேற்று பெய்த மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை எம்எல்ஏ PRG. அருண்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த ஆய்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...