உடுமலை அருகே கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆபத்தான முறையில் பரிசல் பயணம் செல்லும் மலைவாழ் மக்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொள்கின்றனர். மரப்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான கூட்டாற்றில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கூட்டாறு வழியாக தளிஞ்சி, மஞ்சம்பட்டி, மூங்கில் பள்ளம் உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களுக்கு மலைவாழ் மக்கள் சென்று வருகின்றனர். தற்போது, நியாயவிலைக் கடை பொருட்களை கூட்டாறு வழியாக ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில், கூட்டாறு பகுதியில் மலைவாழ் மக்கள் பாதுகாப்பாக செல்ல மரப்பாலம் அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்படக்கூடிய உயிர் ஆபத்துகளை தவிர்க்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அதிகாரிகள் இந்த பிரச்சினையை கவனத்தில் எடுத்து, மலைவாழ் மக்களின் பாதுகாப்பான போக்குவரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...