தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மரபணுத் தேர்வு குறித்த ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சி தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கோயம்புத்தூரில் "மரபணுத் தேர்வு: கோட்பாடுகள் மற்றும் முறைகள்" குறித்த ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சியை அக்டோபர் 14 முதல் 18 வரை நடத்துகின்றன.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம், பிலிப்பைன்ஸ் ஆகியவை இணைந்து "மரபணுத் தேர்வு: கோட்பாடுகள் மற்றும் முறைகள்" என்ற தலைப்பில் ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன. இந்த பயிற்சி நிகழ்ச்சி அக்டோபர் 14 முதல் 18 வரை கோயம்புத்தூரில் உள்ள தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் மையத்தில் நடைபெறுகிறது.

இந்த பயிற்சி நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஐசிஏஆர் ஆராய்ச்சி நிறுவனங்கள், கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடகாவின் யுஏஎஸ் பெங்களூர் ஆகிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர்.



தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குநர் முனைவர் ஆர்.ரவிகேசவன் வரவேற்புரை வழங்கினார். வளவாளர்களான முனைவர் ராஜா ரகுபதி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், முனைவர் பார்த்திபன் பிரகாஷ், பிலிப்பைன்ஸ், சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியோரும் பங்கேற்பாளர்களை வரவேற்றனர். பயிர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இளம் ஆராய்ச்சியாளர்கள் இந்த பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் மையத்தின் இயக்குனர் முனைவர் ந.செந்தில் தனது தொடக்க உரையில், மரபணு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அரிசி/கோதுமையில் மரபணுத் தேர்வைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எம்.ரவீந்திரன், தனது தலைமை உரையில், 2050-க்குள் உணவு தானிய உற்பத்தியைப் பாதுகாக்க மேம்படுத்தப்பட்ட ரகங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். காலநிலை மீள்தன்மையை அடைய பல்வேறு அழுத்த நிலைமைகளின் கீழ் அதிக விளைச்சலுக்கு பயிர்வகைகளை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.



தாவர உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் இ.கோகிலாதேவி நன்றியுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து மரபணுத் தேர்வு: கோட்பாடுகள் மற்றும் முறைகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...