கோவையில் தொடர் கனமழை: சிவானந்தா காலனியில் மழை நீரில் சிக்கிய அரசு பேருந்து

கோவையில் இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. சிவானந்தா காலனி ரயில்வே தரைப்பாளத்தில் அரசு பேருந்து மழை நீரில் சிக்கியது. பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும் மாலை முதல் கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

காந்திபுரம், ராமநாதபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநகரில் பல முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சாய்பாபா காலனி பகுதியில் தனியார் பேருந்து மழை நீரில் சிக்கிய நிலையில், இன்று சிவானந்தா காலனி ரயில்வே தரைப்பாளத்தில் அரசு பேருந்து மழை நீரில் சிக்கியது. இது போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்தது.

மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் மழை நீர் தேங்காமல் இருக்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...