கோவை மாநகராட்சி ஆணையர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, சோமசுந்தரம் மில் சாலை, அவிநாசி மேம்பாலம், சங்கனூர் ஓடை மற்றும் போத்தனூர் பிரதான சாலை பகுதிகளில் குப்பை அகற்றுதல், மழைநீர் வெளியேற்றம் போன்ற பணிகளை ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.



மத்திய மண்டலத்தில் உள்ள சோமசுந்தரம் மில் சாலை பகுதியில் குப்பைகள் அகற்றும் பணியை நேரில் பார்வையிட்ட ஆணையர், பணியை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.





அவிநாசி மேம்பாலம் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.







கிழக்கு மண்டலத்தில் உள்ள சிங்காநல்லூர், கள்ளிமடை, கதிரவன் கார்டன், இரயில்வே மேம்பாலம் அருகில் அமைந்துள்ள சங்கனூர் ஓடை செல்லும் நீர்வழித்தடத்தை பார்வையிட்ட ஆணையர், நீர்வழித்தடத்திலுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



தெற்கு மண்டலத்தில் உள்ள போத்தனூர் பிரதான சாலை பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும் ஆணையர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...