கோவையில் அவசர கால கட்டுபாட்டு உதவி மையம்: மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்கள்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுபாட்டு உதவி மையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுபாட்டு உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1. ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் செல்பி எடுப்பது, குளிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

2. கனமழையின் போது ரயில்வே சுரங்கப்பாதை, தரைப்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கும் போது அப்பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

3. மழையினால் வீடுகளுக்கு அருகில் மரங்கள், கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் விழும் நிலையில் இருந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு அல்லது மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

4. மழைக்காலத்தில் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள குடிநீரை சூடுபடுத்தி குடிக்க வேண்டும்.

மேற்கண்ட அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...