மேட்டுப்பாளையம் நகராட்சியில் மழைக்கால மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் பணியாளர்கள்

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் நகராட்சியில் அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, மீட்பு உபகரணங்களுடன் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். நகராட்சி தலைவர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.


Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழைக்கால மீட்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஏற்கனவே அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மழைக்கால அவசர நிலைகளை எதிர்கொள்ள தேவையான மீட்பு உபகரணங்களுடன் பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி இன்று (அக்டோபர் 15) நேரில் பார்வையிட்டார். இதன்போது, மழைநீர் தேங்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய அவசர நிலைகளை எதிர்கொள்ள 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நகராட்சி தலைவர் உத்தரவிட்டார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...