கோவையில் ASFASM சங்கத்தின் மாநில மாநாடு: NIRF தரவரிசையில் இடம்பெற்ற கல்லூரிகளுக்கு விருது

கோவையில் ASFASM சங்கத்தின் ஒரு நாள் மாநில மாநாடு நடைபெற்றது. NIRF 2024 தரவரிசையில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருது வழங்கப்பட்டது. உயர்கல்வியின் தரம் மற்றும் NIRF மதிப்பீட்டு முறை குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் கிளப்பின் ஜிவி ஹாலில் ASFASMTN (Association of Self-financing Arts, Science & Mangement Colleges of Tamilnadu) சங்கத்தின் ஒரு நாள் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், NIRF (National Institutional Ranking Framework) 2024 தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

ASFASMTN சங்கத் தலைவரும் ஏஜேகே கல்லூரி தலைவருமான பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி, கற்பகம் உயர்கல்வி நிறுவன வேந்தர் முனைவர் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



முனைவர் அஜித் குமார் லால் மோகன் தனது உரையில், உயர்கல்வியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும், NAAC, NIRF போன்றவை கல்வி நிறுவனங்களுக்கு தர நிர்ணய அளவுகோல்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டார். கல்லூரிகள் தங்கள் தரவரிசையை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முனைவர் ராமசாமி NIRF தரவரிசை நடைமுறைகள் குறித்தும், புதிய கல்விக் கொள்கை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். முனைவர் கீதாலட்சுமி, NIRF தரவரிசையில் உள்ள ஒப்பீடுகள் மற்றும் அதன் சிக்கல்கள் குறித்து விளக்கினார்.

நிகழ்வின் இறுதியில், NIRF 2024 தரவரிசையில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, NIRF குறித்த பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...