மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் பிளேக் மாரியம்மன் கோவிலை இடிக்க முயற்சி: பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு

மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 100 ஆண்டுகள் பழமையான பிளேக் மாரியம்மன் கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத் துறை முயற்சி. திமுக முன்னாள் நிர்வாகியின் தூண்டுதலால் நடப்பதாக கூறி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.


கோவை: கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாக உள்ளது.

கோவிலின் அருகே திமுக முன்னாள் நிர்வாகி ஒருவரின் அப்பார்ட்மென்ட் உள்ளது. இந்தக் கட்டிடத்தை கோவில் மறைப்பதாக கூறி அதன் உரிமையாளர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மேலும், திமுகவைச் சேர்ந்த காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் அவர்களும் கோவிலை இடிப்பது சம்பந்தமாக கோவில் நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த தகவலை அறிந்த பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள், அதிமுக நகர்மன்ற உறுப்பினர் வனிதா, திமுக நகர்மன்ற உறுப்பினர் அனிதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு திரண்டனர்.

பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறுகையில், "யாருக்கும் தொல்லையின்றி மேம்பாலத்துக்கு அடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் கோவிலை திமுக முன்னாள் மூத்த நிர்வாகியின் தூண்டுதலின் பேரில் நெடுஞ்சாலைத் துறை இடிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். புகார் கடிதம் கொடுத்தவர்களின் கட்டிடமே கொடுக்கப்பட்ட அனுமதியை விட கூடுதலாக ஒரு மடங்கு உயர்த்தி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது. அது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கோவிலை இடிக்க முன்வருவதை கண்டிக்கிறோம். கோவிலை தொட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து கோவில் இடிப்பதை நெடுஞ்சாலைத் துறை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...