திருப்பூர் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியும் வேர்கள் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

திருப்பூரில் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரி காமர்ஸ் & கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையும் வேர்கள் அமைப்பும் சமூக அர்ப்பணிப்பு செயல்பாடுகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டன. மாணவர்களை சமூக சேவையில் ஈடுபடுத்துவதே நோக்கம்.


திருப்பூர்: திருப்பூர் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியின் காமர்ஸ் & கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையும் வேர்கள் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளன.



முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று (அக்டோபர் 15) இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.



சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் சமூக அர்ப்பணிப்பு செயல்பாடுகளுக்கு மாணவர்களை ஊக்குவிப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களின் அனுபவங்களையும், சமூக ஈடுபாட்டையும் மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.



இயற்கை சேவை, சமூக விழிப்புணர்வு முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல், பொதுவாழ்வின் பொறுப்பை மாணவர்களுக்கு அறிவு பரிமாற்றம் செய்வது ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் குறிக்கோள்களாகும். மேலும் மாணவர்களுக்கு சமூக சேவை மற்றும் சமூக ஈடுபாட்டில் நேரடி அனுபவத்தை வழங்குவதும், மாணவர்களிடையே சமூக பொறுப்புணர்வை வளர்ப்பதும் இதன் நோக்கங்களாகும்.



இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் மாணவர்கள், வேர்கள் அமைப்பினர், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...