திருப்பூர் அருகே பள்ளி வளாகத்தில் மழைநீர் தேக்கம்: மாணவர்கள் அவதி, பெற்றோர்கள் முற்றுகை

திருப்பூர் அருகே பல்ல கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று அபாயம் காரணமாக பெற்றோர்கள் திடீர் முற்றுகை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல்ல கவுண்டம்பாளையம், சரவணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.



இந்த பள்ளியில் 648 மாணவ மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.



நேற்று இரவு ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள் சேற்றில் கால் வைத்து நடந்து வகுப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மழைநீர் பள்ளி வளாகத்திற்குள் தேங்கி நிற்காதபடி பள்ளமாக இருக்கும் மைதானத்தில் மண் நிரப்பித் தரக் கோரி 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே போன்ற சூழ்நிலையில் ஒரு மாணவி விழுந்து காயமடைந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாவட்ட அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் பல முறை பள்ளி பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது மழைக்காலம் என்பதால், மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகமும் கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனிடையே, திருப்பூர் மாநகராட்சி சார்பில் மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 0421-2321500 என்ற எண்ணுக்கும், இலவச அழைப்பு எண் 1800-425-7023 என்ற எண்ணுக்கும் அழைத்து உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...