கோவை இரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள், கை கழுவும் தினம் மற்றும் உலக மாணவர் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் கலாம் முகமூடி அணிந்து, அவரது பொன்மொழிகளை ஏந்தி உறுதிமொழி எடுத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் இரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் அக்டோபர் 15 அன்று அப்துல் கலாம் பிறந்த தினம், கை கழுவும் தினம் மற்றும் உலக மாணவர் தினம் ஆகியவை கொண்டாடப்பட்டன. இந்த நிகழ்வில் மாணவர்கள் அப்துல் கலாம் முகமூடி அணிந்து வந்திருந்தனர்.



கொண்டாட்டத்தின் போது, மாணவர்கள் அப்துல் கலாமின் சாதனையான ஏவுகணை முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவரது பொன்மொழிகளை கரங்களில் ஏந்தி மாணவர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.



அப்துல் கலாமின் பெரும் கனவான மரம் நடும் பணியிலும் மாணவர்கள் ஈடுபட்டனர். குழந்தைகள் கொண்டு வந்த அழகிய மலர் செடிகளை தங்கள் கரங்களால் பள்ளி வளாகத்தில் நட்டனர். மலர்ச்செடிகளை கொண்டு வந்த அனைத்து மாணவர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சரோஜா பாராட்டி வாழ்த்தினார்.

இந்த நிகழ்வு மூலம் மாணவர்களிடையே அப்துல் கலாமின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை பற்றிய விழிப்புணர்வும் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...