கோவை அப்பநாயக்கன்பாளையத்தில் பாதாள சாக்கடை பணிகளால் சேதமடைந்த சாலைகள்: எம்.எல்.ஏ. அருண்குமார் ஆய்வு

கோவை அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளால் சேதமடைந்த சாலைகளை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆய்வு செய்தார். மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்தது.



கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண் 1க்கு உட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் ஈஸ்வரா சக்தி நகர் மற்றும் பி.எம்.பி வசந்தம் திரு முருகன் நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் காரணமாக சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படாததால் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாகி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அப்பநாயக்கன்பாளையம் ஈஸ்வரா சக்தி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு 3 மாதங்கள் ஆகியும், காங்கிரீட் மற்றும் தார் சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால், தற்போது பெய்துவரும் கனமழையால் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளதோடு, குடியிருப்புகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற அருண்குமார் எம்.எல்.ஏ., அப்பகுதிகளை பார்வையிட்டார். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, மழைநீர் தேங்காவண்ணம் வடிகால் அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட பகுதியில் 3 வீடுகள் உள்ள தெருவில் சாலை அரசிற்கு ஒப்படைக்கப்படாத காரணத்தால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இப்பகுதிக்கும் பாதாள சாக்கடை அமைத்துத் தருமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.



அதேபோல், அப்பகுதியில் மிகவும் தாழ்வாக மின்கம்பிகள் செல்வதாக பொதுமக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, அருண்குமார் எம்.எல்.ஏ. உடனடியாக மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி அதைச் சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வார்டு எண் 1க்கு உட்பட்ட பி.எம்.பி வசந்தம் திருமுருகன் நகரிலும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளி வாகனங்கள் நகருக்குள் வருவதில்லை என்றும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பெரியோர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களும் சிரமப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இங்கும் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. அருண்குமார், அதிகாரிகளிடம் பேசி விரைந்து பணிகளை முடித்துத் தருமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பகுதி செயலாளர் வனிதா மணி, ஐ.டி.விங் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், வார்டு செயலாளர்கள் சாந்தி பூசன், சுரேஷ்குமார், கழக பொறுப்பாளர்கள் சண்முகம், ரங்கநாதன், பாலாஜி நந்தகோபால், மோகன்ராஜ், முத்து உள்ளிட்ட நகர பொதுமக்களும் அசோசியேஷன் தலைவர்களும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...