வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் சேவை நவம்பர் 16, 17 ஆகிய இரு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



கோவை: வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பல்சக்கரம் மூலம் இயக்கப்படும் இந்த மலை ரயில், கல்லாரில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணித்து செல்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மலை ரயில் பாதை அமைந்துள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு ரயில்வே தண்டவாளங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், மரங்கள் முறிந்து விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...