திருப்பூரில் சிலிண்டர் கசிவு: பள்ளி மாணவிக்கு 75 சதவீதம் தீக்காயம்

திருப்பூர் வஞ்சிபாளையத்தில் சிலிண்டர் கசிவால் தீ விபத்து. 6ஆம் வகுப்பு மாணவி கௌசல்யா (11) 75 சதவீதம் தீக்காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி. தந்தைக்கும் காயம்.


திருப்பூர்: திருப்பூர் இடுவாய் அருகே வஞ்சிபாளையம் பகுதியில் இன்று காலை சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 6ஆம் வகுப்பு மாணவி கௌசல்யா (11) மற்றும் அவரது தந்தை ஜீவா (44) தீக்காயமடைந்தனர்.

ஜீவா தனது மனைவி மகாலட்சுமி (36) மற்றும் இரண்டு மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது மகள்கள் ஸ்ரீமதி (13) மற்றும் கௌசல்யா (11) இடுவம்பாளையம் அரசு பள்ளியில் முறையே 8 மற்றும் 6ஆம் வகுப்பு பயின்று வந்தனர்.



காலை வேளையில் வீட்டில் சிலிண்டர் மாற்றும்போது, வாஷர் வழியாக எரிவாயு கசிந்து தீப்பற்றியது. மகாலட்சுமி தனது மகள் ஸ்ரீமதியுடன் வெளியேறினார். ஜீவா உள்ளே சென்று கௌசல்யாவை மீட்டார். இதில் கௌசல்யா மற்றும் ஜீவா தீக்காயமடைந்தனர்.

இருவரும் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜீவாவிற்கு கைகளில் மட்டும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கௌசல்யாவிற்கு உடல் முழுவதும் 75% தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

கௌசல்யாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். வீரபாண்டி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...