திருப்பூரில் குப்பை கொட்டும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் முதலிபாளையத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார பிரச்னைகள் ஏற்படுவதாக கூறி, பொதுமக்கள் குப்பை லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் கொட்டுவதால் ஏற்படும் சுகாதார பிரச்னைகளை எதிர்த்து, பொதுமக்கள் குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தினசரி 600 டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டு, முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கல் குவாரி குழியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், சுவாசக் கோளாறு மற்றும் சரும நோய் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த பிரச்னை குறித்து பலமுறை மாநகராட்சியில் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.



இந்நிலையில், முதலிபாளையம் மற்றும் சென்னிமலை பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், குப்பை கொட்ட வந்த மாநகராட்சி லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், குப்பை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதால் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படாது என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...