திருப்பூரில் மழை நீரில் நிரம்பிய பாதாள சாக்கடையில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டி மீட்பு; வாகனத்தை தேடும் பணி தீவிரம்

திருப்பூரில் கனமழையால் பாதாள சாக்கடை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டி மீட்கப்பட்டார். வாகனத்தை மீட்கும் பணி தொடர்கிறது. பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாநகரில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. திருப்பூர் தெற்கு தொகுதியில் மட்டும் ஒரே நாளில் 9.6 சென்டிமீட்டர் மழை பதிவானது.

நேற்று பெய்த கனமழையின் காரணமாக மாநகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது.



பல வஞ்சிபாளையம் ஜெயலலிதா நகர் அருகே உள்ள குடியிருப்பில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.



இதேபோல் முத்தையன் நகர், ஆனந்தா அவன்யூ உள்ளிட்ட பகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.



பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் நேற்று இரவு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் திருப்பூர் மாநகரம் முழுவதும் மழை நீரால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியை அடுத்த ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகே பாதாள சாக்கடை நிரம்பி மழை நீரோடு சாக்கடை நீரும் சேர்ந்து சென்றதால் பாதாள சாக்கடையில் மேற்பகுதி உடைந்து தண்ணீர் வெள்ளம்போல் சாலையில் சென்று கொண்டிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்வதற்கான பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது எதிர்பாராத விதமாக செவந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் (40) என்பவர் அவ்வழியே வரும்போது சாலையில் பாதாள சாக்கடை உடைபட்டதை அறியாமல் வந்தபோது இருசக்கர வாகனத்துடன் பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தனசேகரனை மீட்டு நிலையில் இருசக்கர வாகனம் 20 அடி ஆழமுள்ள பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்துள்ளது.



தொடர்ந்து ஜேசிபி வாகனம் மூலம் தண்ணீர் செல்லும் பாதை விரிவுபடுத்தப்பட்டு சாக்கடை நீரும், மழை நீரும் வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து வாகனத்தை மீட்டெடுக்கும் பணியில் மாநகராட்சியின் ரெக்கவரி வாகனம் கொண்டுவரப்பட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது‌.



தண்ணீர் அதிக அளவில் இருந்த காரணமாக தேடும் பணி நடைபெற்றது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திமுக தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜன், மாமன்ற உறுப்பினர் பி ஆர் செந்தில்குமார், மாநகர உதவி போலீஸ் கமிஷனர் அணில் குமார் உள்ளிட்ட டோர் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை துரிதப்படுத்தினர்.

தொடர்ந்து பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் யுனிவர்சல் தியேட்டரில் இருந்து மின் மயானம் செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்து மாநகராட்சி அலுவலர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...