கோவையில் கீழே கிடந்த ரூ.50,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த நிர்மலா என்ற பெண்ணை போலீஸ் கமிஷனர் பாராட்டினார். பின்னர் உரிய நபரிடம் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.


கோவை: கோவை சித்தாபுதூர் பாலாஜி நகரைச் சேர்ந்த நிர்மலா (41) என்ற பெண், சாலையில் கிடந்த ரூ.50,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த நேர்மையான செயலுக்காக பாராட்டப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி, நிர்மலா தனது தாயார் சாரதாவுடன் பாலசுந்தரம் ரோட்டில் நடைபயிற்சி சென்றபோது, சாலையில் ரூ.50,000 பணக்கட்டு கிடந்ததைக் கண்டார். பணத்தை தேடி யாரும் வராததால், அவர் அந்தப் பணத்தை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூனிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், நிர்மலாவை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். அதே நேரத்தில், பணத்தை இழந்தவரைக் கண்டறிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், செபாஸ்டியன் என்பவர் தான்தான் அந்தப் பணத்தை இழந்ததற்கான ஆதாரங்களைக் காட்டினார். இதையடுத்து, நேற்று (அக்டோபர் 15) ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன், நிர்மலாவின் முன்னிலையில் செபாஸ்டியனிடம் பணத்தை ஒப்படைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...