நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நல்லம்மன் கோவிலை சூழ்ந்த நீர், அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது

வடகிழக்கு பருவமழையால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நல்லம்மன் தடுப்பணை கோவிலையும் அணைப்பாளையம் தரைப்பாலத்தையும் மூழ்கடித்தது. பொதுமக்கள் எச்சரிக்கை.


திருப்பூர்: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள சூழலில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.



இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



குறிப்பாக திருப்பூர் வஞ்சிபாளையம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணை கோவிலை நொய்யல் ஆற்று நீர் சூழ்ந்து கோவிலுக்கு செல்லும் பாதையை மூழ்கடித்து சென்று கொண்டிருக்கிறது.



காரணமாக, பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஆண்டிபாளையம் அருகே அமைந்துள்ள அணைப்பாளையம் தரைப்பாலத்தையும் மூழ்கடித்து நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் இருகரைகளை தொட்டு சென்று கொண்டிருக்கிறது. தரைப் பாலத்தை யாரும் வாகன ஓட்டிகள் கடந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நீர்நிலைகள் அருகே செல்வதை தவிர்க்குமாறும், அவசர தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...