திருப்பூரில் கனமழை: சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் மிதந்த பிளாஸ்டிக் பாட்டில்கள்

திருப்பூரில் மாலை 3 மணி நேரம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்றன.


திருப்பூர்: திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூரில் மாலை சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து சாலைகளில் ஓடியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பழ வஞ்சிபாளையம், முத்தையன் நகர், பிச்சம்பாளையம், அங்கேரிபாளையம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தாங்களாகவே மழைநீரை வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காந்திநகர் அடுத்த ஃபயர் சர்வீஸ் காலனி பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய நீரும் மழைநீரும் கலந்து அப்பகுதி சாலைகளில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.



இந்த நீரில் ஏராளமான குப்பைகளுடன் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்றன. இக்காட்சி அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.



அப்பகுதி பொதுமக்கள் வெளியே நின்று குப்பைகள் தங்கள் வீட்டிற்குள் நுழையாதவாறு குச்சிகளை வைத்து தடுத்து மழைநீரில் இருந்து தங்களை காத்துக் கொண்டனர். இச்சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...