வடகிழக்கு பருவமழை: திருப்பூரில் 52 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் - அமைச்சர் சாமிநாதன்

திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள 52 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் கண்காணிப்பு குழு அலுவலர் நிர்மல் ராஜ், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், திருப்பூர் மாவட்டம் முழுவதும் 52 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது வரை திருப்பூர் மாவட்டத்தில் பருவமழையால் பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அனைத்து அலுவலர்களும் தொடர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். வீரபாண்டி பகுதியில் 40 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்கள் மற்றும் தீர்வுகளை மாவட்ட நிர்வாகம் வழங்கும் என்றார்.

மாநகர் பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த குப்பைகளை பாறைக்குழியில் கொட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் இப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.

திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்த நாட்டு வெடி விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவும், சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக விரைவில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...