கோவை: 27-வது வார்டில் சாக்கடை சுத்தம் மற்றும் காய்ச்சல் சிறப்பு முகாம் - கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு

கோவை மாநகராட்சி 27-வது வார்டில் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர் அம்பிகா தனபால். பீளமேடு பகுதியில் காய்ச்சல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 27-வது வார்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



பீளமேடு என்ஜிஆர் வீதி, இஎஸ்ஐ காம்பவுண்ட் பகுதி மற்றும் பூசாரி ராமசாமி வீதி பகுதிகளில் நடைபெற்ற சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் பார்வையிட்டார்.



சாக்கடைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறும், சாலையோரத்தில் உள்ள செடிகளை அகற்றுமாறும் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



கிரி அம்மன் கோயில் வீதி பகுதியில் தினசரி குப்பை வாங்கும் தள்ளுவண்டி சரியாக வருகிறதா என்பதை உறுதி செய்தார்.



குப்பைகள் முழுவதும் சேகரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும், சாலையோரத்தில் உள்ள குப்பைகளை அகற்றுமாறும் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



இதே வார்டில் உள்ள பீளமேடு குறும்பர் வீதி பகுதியில், கோயமுத்தூர் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் நடத்தும் காய்ச்சல் சிறப்பு முகாமை கவுன்சிலர் அம்பிகா தனபால் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு மற்றும் முகாம் தொடக்க நிகழ்வுகள் அனைத்தும் அக்டோபர் 16 அன்று நடைபெற்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...