கோவை அவிநாசி மேம்பாலம் மற்றும் காளீஸ்வரா மில் சாலை மேம்பாலத்தில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் அவிநாசி மேம்பாலம் அருகில் ரெடிமேடு சிறுபாலம் மற்றும் காளீஸ்வரா மில் சாலை மேம்பாலம் அருகில் மின் மோட்டார்கள் பொருத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.10.2024) மத்திய மண்டலத்திற்குட்பட்ட இரண்டு முக்கிய பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தார்.

முதலில், அவிநாசி மேம்பாலம் அருகில் உள்ள பிரதான சாலை ஆடிஸ் வீதி பகுதியில் தேங்கும் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் சுமார் 30 மீட்டர் நீளத்திற்கு வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறுபாலம் அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



அடுத்ததாக, ஆணையாளர் காளீஸ்வரா மில் சாலை மேம்பாலம் அருகில் தேங்கும் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் புதிதாக 2 மின் மோட்டார்கள் பொருத்தப்படுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இங்கும் மின் மோட்டார்களை விரைவாக பொருத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



இந்த இரு பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் பணிகள் மழைக்காலத்தில் நீர் தேங்குவதைத் தடுக்கும் என்றும், பொதுமக்களின் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கும் என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...