கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஒரு மாத போனஸ் கோரி காத்திருப்பு போராட்டம்

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளம் கோரி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதிகார குரல் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் இன்று (அக்.16) ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது அதிகார குரல் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டமைப்பில் உள்ள தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் எனக் கூறியுள்ள அவர்கள் அதுவரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.



இது குறித்து பேசிய தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு 2000 ரூபாய் தான் போனஸ் என்று கூறி தருவதாகவும் இது எப்படி போதுமானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினர். ஒரு மாத சம்பளத்தை தங்களுக்கு போனசாக வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், தங்களுக்கு யாசகம் போடுவதைப் போல் அந்த தொகையை தருவதாக வேதனை தெரிவித்தனர்.

வருடா வருடம் தீபாவளி வரும் பொழுதெல்லாம் ஒப்பந்ததாரர்கள் மாறி விடுவதாகவும், இதனால் தங்களுக்கு போனஸ் முறையாக வருவதில்லை என்றனர். மேலும் மாநகராட்சி நிர்வாகம் நஷ்டத்தில் ஓடுவதாக ஒப்பந்ததாரர்களுக்கு கூறுவதாக தெரிவித்த அவர்கள், எப்படி இவ்வளவு பெரிய மாநகராட்சி நிர்வாகம் நஷ்டத்தில் ஓடும் எனவும் கேள்வி எழுப்பினர்.

ஹோட்டலில் பணிபுரிபவர்களுக்கு கூட ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்குகிறார்கள் எனவும், ஆனால் தூய்மை பணி செய்யும் தங்களுக்கு வெறும் 2000 அல்லது 2500 ரூபாய் தான் போனஸ் என்று கூறி வழங்குவதாக தெரிவித்தனர். மேலும் கொரோனா காலத்தில் அரசு வழங்குவதாக அறிவித்த தொகையையும் தர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...