வடகிழக்கு பருவமழை: தயார் நிலையில் இருக்க கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் தலைமையில் வடகிழக்கு பருவமழை தயார்நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்புரம் கலையரங்க கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பேசுகையில், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், கோவை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மழை தொடர்பான பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மழைநீரை வெளியேற்றும் மின் மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள், தடுப்புச்சுவர்களை பாதுகாப்பாக அகற்றவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் உத்தரவிட்டார்.

சாலைகளில் தேங்கும் மழைநீர் விரைவாக வெளியேற, வடிகால்களின் பக்கவாட்டில் சிறிய துளைகள் இடவேண்டும் என்றார். மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சுகாதாரத்தை பேண, விரைவான தூய்மைப் பணிகளையும், தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்டு முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றார். மழை தொடர்பான பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாநகர நல அலுவலர் (பொ) மருபூபதி, செயற்பொறியாளர்கள் இளங்கோவன், கருப்பசாமி, நகரமைப்பு அலுவலர் குமார், மண்டல உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...