வடகிழக்கு பருவமழை: கோவையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கோவையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு. மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் இன்று (அக்.16) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயமுத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மாநகராட்சி ஆணையரின் அன்பான வேண்டுகோள், தற்போது கோயமுத்தூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழைக்காலம் தீவிரம் அடைந்துள்ளதால், காய்ச்சல் (டெங்கு காய்ச்சல் உட்பட) பரவுதவற்கு சாதகமான காலநிலை நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி முதல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 14ம் தேதி 52 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 3091 பேர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 82 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

15ம் தேதி 37 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 2534 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 35 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 16ம் தேதி 71 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 3920 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 89 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பருவமழைக்காலம் முடியும் வரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு பருவமழை காலம் குறித்தும், காய்ச்சல் பரவுதலை தடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்தம் வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுக்கள் பரவாமல் தடுப்புப்பணிகளை கையாள்வது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவ/மாணவியர்களில் காய்ச்சல் ஏற்படும்போது அது குறித்து சம்பந்தப்பட்ட வார்டு மண்டல சுகாதார அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்கள் காய்ச்சல் தடுப்புப்பணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் ஏற்படின் மருந்தகங்களில் மருந்துகள் வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து, உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்/மருத்துவமனைகளில் தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும், தினசரி குடிநீரை காய்ச்சி ஆறவைத்து பருகுமாறும் மாநகราட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொது மக்கள் வசிக்கும் வீடுகளிலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் மழைநீர் வடிகால் முறையாக பராமரிப்பு செய்திடல் வேண்டும் என்றும், பருவமழைக்காலத்தில் காய்ச்சல் முகாம்களில் கலந்து கொண்டு காய்ச்சல் பரவாமல் தவிர்க்கும்படியும் மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...