கோவை உப்பிலிபாளையம் சந்திப்பில் புதிய கால்வாய் அமைப்பு: ஆட்சியர், ஆணையர் ஆய்வு

கோவை உப்பிலிபாளையம் சந்திப்பில் மழைநீர் தேக்கத்தை தடுக்க புதிய கால்வாய் அமைக்கும் பணியை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தனர். மழைக்கால பாதிப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை உப்பிலிபாளையம் சந்திப்பில் அவிநாசி மேம்பாலம் மற்றும் வஉசி பூங்கா பகுதிகளில் தேங்கும் மழைநீரை அகற்றுவதற்காக புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இன்று (அக்டோபர் 16) நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர் பகுதியில் மழைநீர் தேங்குவது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். அவிநாசி மேம்பாலம் சுரங்கப்பாதை அருகே ஏற்கனவே கிரில் அமைத்து மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.



அவிநாசி சுரங்கப்பாதை, சிவானந்தா காலனி ஏஆர்சி சுரங்கப்பாதை, செம்மொழி பூங்கா ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்தார். புதிதாக அமைக்கப்படும் கால்வாய் மூலம் அவிநாசி மேம்பாலம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஏஆர்சி மேம்பாலத்தின் கீழுள்ள சாலையிலும் இதேபோன்ற வாய்க்கால் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்தப் பணி சுமார் 15 நாட்கள் நீடிக்கும் என்றும், தற்போது மழைக்காலம் என்பதால் இரவு நேரங்களிலும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டு பருவமழை காலத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருக்கும் என்று உறுதியளித்தார்.

சாக்கடை கால்வாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், குளங்கள் மற்றும் கால்வாய்களில் இருந்து தூர் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். எதிர்காலத்தில் கனமழை பெய்தால் குடியிருப்புப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்களை தங்க வைக்க கோவை மாநகராட்சி பகுதியில் 76 மையங்களும், புறநகர் பகுதியில் 66 மையங்களும் தயார் நிலையில் உள்ளதாகக் கூறினார்.

மழைநீர் நொய்யல் ஆற்றில் உள்ளே செல்லும் பாதை மற்றும் வெளியேறும் பாதை ஆகியவற்றை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் 24 மணி நேரமும் வாகன வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்துவோம் என்றும் ஆட்சியர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...