சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் சிறுத்தை தாக்குதல்: மக்கள் அச்சம்

சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் குடியிருப்புக்குள் புகுந்து சிறுத்தை ஆட்டை வேட்டையாடிச் சென்றதால் மக்கள் அச்சம். சிறுத்தையை உடனடியாக பிடிக்க கோரிக்கை.


Coimbatore: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் கிராமத்தில் குடியிருப்புக்குள் புகுந்து சிறுத்தை ஆட்டை வேட்டையாடிச் சென்றதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள லிங்காபுரம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உதயகுமார் என்பவர் தனது வீட்டின் காம்பவுண்டுக்குள் செட் அமைத்து ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறார்.



நேற்று இரவு அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று, உதயகுமார் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்திருந்த போது, அவர்களது கண் முன்னாலேயே அவர்களது ஆட்டை அடித்து கவ்வி இழுத்துச் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உதயகுமார் உடனடியாக வனத்துறை சோதனை சாவடிக்கு ஓடிச் சென்றார். ஆனால் அங்கே ஆட்கள் யாரும் இல்லாததால், பின்னர் தொலைபேசி மூலம் தகவல் அளித்து வன ஊழியர்களை வரவழைத்துள்ளார்.

வனத்துறையினர் சோதனை செய்தபோது சிறுத்தையின் கால் தடங்கள் மற்றும் சிறுத்தை இழுத்துச் சென்ற அடையாளங்கள் தென்பட்டன. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது ஊருக்கு மத்தியில் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து சிறுத்தை வேட்டையாடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகே 500 மீட்டர் தொலைவில் அரசு தொடக்கப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள அந்த சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...