அவினாசி சாலையில் மழைநீர் வெளியேற்றும் பணியை ஆய்வு செய்த ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் அவினாசி சாலையில் மழைநீர் வெளியேற்றும் பணியை ஆய்வு செய்தார். சாலையோர வடிகால்களில் சிறு துளைகள் இடும் பணி குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (17.10.2024) மத்திய மண்டலத்திற்குட்பட்ட அவினாசி சாலை பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில், சாலையின் இரு புறங்களிலும் உள்ள வடிகால்களின் பக்கவாட்டில் சிறிய அளவிலான துளைகள் இடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



ஆய்வின் போது, துளைகளிடும் பணியை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் தனபாலன் மற்றும் பிற மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...