கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் இரண்டாம் நாள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்தது. தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிகார குரல் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

முதல் நாளான நேற்று சுமார் 30க்கும் குறைவான பணியாளர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இரண்டாவது நாளான இன்று (அக்டோபர் 17) நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்திய பணியாளர்கள், மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து இதற்கு ஒரு தீர்வு காணப்படும் வரை போராட்டத்தை தொடர்வதாக உறுதியாக தெரிவித்தனர்.



போனஸாக 2000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்படுவதாகவும், இது போதுமானதாக இல்லை என்றும் பணியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்நிலையில், மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று பணியாளர்கள் உறுதியாக கூறி, தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...