கோவை ரயில் நிலையத்தில் கைதி தப்பியோட்டம்



கருமத்தம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் பணம் திருடிய வழக்கில் தீனதயாளன் மற்றும் அவரது மனைவி பிரியங்கா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ஜாமீனில் வந்த அவர்கள் ஆந்திராவிற்கு தப்பி சென்று வேறு நிறுவனதில் பணியாற்றிய போது அங்கேயும் திருடி மாட்டிக்கொண்டனர். அப்போது நெல்லூர் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் இன்று நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜெ.எம்-2 நீதிமன்றத்திற்கு ஆந்திர போலீசார் ரயில் மூலம் அழைத்து வந்தனர். பாதுக்காப்பிற்காக 4 ஆந்திர போலீசார் உடனிருந்தனர்.

கால் ஊனமுற்ற தீனதயாளன் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று ஆந்திர போலீசாரிடம் கூறிய நிலையில், அவரை போலீசார் கழிவறைக்குள் செல்ல அனுமதித்தனர். அப்போது தீனதயாளன் சுவற்றின் மீது ஏறி தப்பிச்சென்றார். இது குறித்து கோவை ரயில்வே போலீசாரிடம் ஆந்திர போலீசார் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர்.

முன்னதாக, தீனதயாளன் மீது காளஹஸ்தி, சென்னை போன்ற இடங்களில் திருட்டு வழக்கு உள்ளது. தற்போது கண்காணிப்பு காமிராக்களில் தப்பிச்சென்ற தீனதயாளனின் பதிவான காட்சிகள் மூலம் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...