கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42 லட்சம் கேட்டனர். விழிப்புடன் இருந்த முதியவர் சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு தப்பினார். போலீசார் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவையில் டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் 73 வயது முதியவர் ஒருவரை மோசடி செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த 73 வயதான முதியவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சமீபத்தில் அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் மும்பையில் இருந்து பேசும் CBI அதிகாரி என்று கூறினார்.

மேலும் அவர், "உங்கள் வங்கி கணக்கில் இருந்து போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகமாக பணம் அனுப்பப்பட்டு உள்ளதை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்" என்று கூறினார்.

"இது தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உங்களை வீட்டில் இருந்தபடியே நாங்கள் டிஜிட்டல் அரஸ்ட் செய்து உள்ளோம். உங்கள் வங்கி கணக்கில் உள்ள ₹42 லட்சத்தை அபராத தொகையாக செலுத்தினால் மட்டுமே உங்களை விடுவோம்" என்று மிரட்டினார்.

இதற்கு அந்த முதியவர், "நான் யாருக்கும் பணம் அனுப்பவில்லை. பின்னர் ஏன் உங்களுக்கு அபராத தொகை செலுத்த வேண்டும்?" என்று கேட்டார்.

சிறிது நேரம் கழித்து வீடியோ காலில் வந்த அதே நபர், போலீஸ் சீருடையில் இருப்பது போன்றும், பின் பக்கத்தில் போலீஸ் நிலையம் இருப்பது போன்ற அடையாளங்களும் காட்டினார்.

தொடர்ந்து அவர்கள், "நாங்கள் உங்கள் வீட்டின் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசாரை கண்காணிப்புக்கு வைத்துள்ளோம். அபராத தொகையான ₹42 லட்சத்தை செலுத்தும் வரை நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. அதையும் மீறி சென்றால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்படுவீர்கள்" என்று மிரட்டினர்.

அதை நம்பாத அந்த முதியவர் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டு, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போலீசார், "டிஜிட்டல் அரஸ்ட் என்பது கிடையாது. அப்படி யாரும் கூறி மிரட்டினால் நம்ப வேண்டாம். அத்துடன் பணம் கேட்டு மிரட்டினால் அனுப்ப வேண்டாம்" என்று கூறினர். இதனை தொடர்ந்து அந்த முதியவர் நிம்மதியடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் நேற்று கூறியதாவது: "டிஜிட்டல் அரஸ்ட் என்பதே கிடையாது. கைது செய்ய வேண்டும் என்றால், போலீசார் வீட்டுக்கே வந்து கைது செய்துதான் அழைத்து செல்வார்கள். டிஜிட்டல் அரஸ்ட் என்று சொல்லி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது."

"அதுபோன்று போலீஸ் அதிகாரிகள் என்று கூறி வங்கியில் உள்ள பணத்தை நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு அனுப்புங்கள் என்று கூறி மிரட்டினாலும் பணத்தை அனுப்பக்கூடாது. எந்த போலீஸ் அதிகாரிகளும் நமது வங்கியில் உள்ள பணத்தை அவர்களுக்கு அனுப்ப சொல்ல மாட்டார்கள். இதில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்."

"அப்படி யாரும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டினால், உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கோ, சைபர் கிரைம் போலீசுக்கோ தொடர்பு கொள்ளலாம். கோவை மாநகர காவல் துறை சார்பில் டிஜிட்டல் அரஸ்ட் தொடர்பாக குறும்படம் வெளியிட்டும் மக்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது" என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...