கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் உடன் சென்றனர். திமுக ஆட்சியை விமர்சித்து பேசினார்.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தீவிர பிரச்சார பணிகளை மேற்கொண்டார். கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள அவர், பெரியநாயக்கன்பாளையம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கஸ்தூரிபாளையம், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று மக்களைச் சந்தித்தார்.








பிரசார பயணத்தின் போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், பூசணிக்காயால் சுற்றி திருஷ்டி கழித்தும், ஏலக்காய் மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அவருடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.




பொதுமக்களிடம் பேசிய பிஆர்ஜி அருண்குமார், "அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் இப்பகுதிக்கு வரவும், அதேபோல மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் இந்த தொகுதிக்கு வரவும் நீங்கள் எல்லாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.




திராவிட முன்னேற்றக் கழக அரசை கடுமையாக விமர்சித்த அவர், "கடந்த ஐந்தாண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழக அரசு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்து எதையுமே செய்யாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த ஆட்சி சட்ட ஒழுங்கு சரியில்லாத ஆட்சி, அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சி" எனக் கூறினார்.




மேலும் பேசிய அவர், "Stalin அவர்களை வீட்டுக்கு அனுப்பி, Edappadi அவர்களை கோட்டைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...