சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதே முக்கியம் என கூறி மக்களிடம் ஆதரவு கோரினார். கொங்கு பகுதியில் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு திரட்ட தீவிர பரப்புரை மேற்கொண்டார்.


Coimbatore: கொங்கு பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று மாலை கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி மற்றும் செந்தமிழ் செல்வன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பொதுமக்களிடம் பேசிய அவர், தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் ஒருமுறை மட்டுமே பிரச்சாரத்திற்கு சென்றதாகவும், கோவை தெற்கு மற்றும் வடக்கு வேட்பாளர்களின் வெற்றியே தற்போது முக்கியம் என்பதற்காகவே கோவைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.



"சேப்பாக்கத்தில் நான் வெற்றி பெறுவதை விட கோவை தெற்கு, வடக்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதே முக்கியம். கடந்த முறை இந்த தொகுதிகளில் திமுக தோல்வியடைந்த நிலையில், இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜியும், கோவை வடக்கு தொகுதியில் செந்தமிழ் செல்வனும் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். இந்த இரு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களுக்கு வெற்றி பெற செய்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.



கொங்கு பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் பல்வேறு தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின், கோவை மக்களிடம் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வலியுறுத்தினார். தேர்தல் பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...