கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன் அண்ணாமலையின் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது.


கோவை: தமிழக அரசியலில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கோவையில், பா.ஜ.க மையக்குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலைஆதரவு போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இந்த கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், தற்போது உயர்கல்விக்காக லண்டனில் தங்கி இருக்கும் அண்ணாமலை நேரடியாக பங்கேற்காத சூழலிலும், அவரது தீவிர ஆதரவாளர்கள் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த போஸ்டர்களில் அண்ணாமலையின் புகைப்படத்துடன், “Fearless Minds Have No Limits” — அதாவது “பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை” என்ற ஆங்கில வாசகம் இடம்பெற்றுள்ளது. அவிநாசி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும், “Army of Dheeran Annamalai” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள், கோவை அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாத நேரத்திலும், அவரது ஆதரவாளர்கள் நகரம் முழுவதும் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டி தங்களது பலத்தை வெளிப்படுத்தியிருப்பது, பா.ஜ.க உள்கட்சிக்குள் புதிய அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகிறதா என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...