சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகியோர் கண்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இழந்த பணத்தை இரும்பு கடை உரிமையாளர் தானாராமிடம் திரும்ப வழங்கிய காவல்துறை, நேர்மையான இருவருக்கும் பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவித்து கெளரவித்தது.


Tiruppur: திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மதன், சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை கண்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்ததற்காக துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் உள்ளிட்ட காவல் துறையினரால் பாராட்டப்பட்டார்.






வளர்மதி ஆட்டோ ஸ்டாண்டில் பணிபுரியும் மதன், இன்று காலை தனது உறவினர் பிரபுவை அழைத்துக்கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் செல்லும் வழியில், வளம் பாலம் பகுதியில் கீழே கிடந்த பிங்க் நிற பையை கவனித்தார். அதை எடுத்து பார்த்தபோது உள்ளே கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக இருவரும் திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமாரிடம் பணப்பையை ஒப்படைத்தனர்.






காவல்துறையினர் பையை சோதனை செய்தபோது ₹5,64,000 இருந்தது உறுதியானது. அதே சமயம், ராஜஸ்தானைச் சேர்ந்த தானாராம் என்பவர் திருப்பூர் வளம் சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று காலை தனது கடையிலிருந்து வங்கியில் செலுத்த ₹5.64 லட்சம் எடுத்துச் சென்றபோது, இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மாட்டியிருந்த பை கீழே விழுந்துவிட்டதாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.




பையில் இருந்த அடையாளங்கள் மற்றும் பணம் உறுதி செய்யப்பட்ட பின்னர், காவல்துறையினர் தானாராமிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்தனர். துணை ஆணையர் தீபாசத்யன் மற்றும் உதவி ஆணையர் ஜான் உள்ளிட்ட காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் பிரபு ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் தெரிவித்தனர்.




மேலும் துணை ஆணையர் தீபாசத்யன், மதன் மற்றும் பிரபு இருவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார். "ஒவ்வொரு குடிமகனும் இதே போல பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பணம் இழந்தவர்கள் துயரப்பட்ட நிலையில், இரண்டு நல்ல மனங்கள் பணத்தை கண்டெடுத்து திரும்ப ஒப்படைத்தனர். அதேபோல் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்" என துணை ஆணையர் தீபாசத்யன் தெரிவித்தார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...