கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு பணிகள், ஒப்பந்த ஊழியர்கள் வருகை, மருத்துவ சேவைகள் ஆகியவற்றை சுமார் 3 மணி நேரம் விரிவாக ஆய்வு செய்தார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.




கடந்த வியாழக்கிழமை கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக அமைச்சர் இந்த நள்ளிரவு திடீர் ஆய்வை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இரவு 11 மணி அளவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சம்பத், தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதை விரிவாக ஆய்வு செய்தார். ஒப்பந்த ஊழியர்களின் பட்டியலை ஆய்வு செய்து, அனைவரும் பணியில் உள்ளனரா, வருகைப் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் உறுதி செய்தார்.






மேலும், உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், இரவு நேர சிகிச்சைப் பிரிவுகளின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்தும் நேரடியாக கண்காணித்தார். பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று நோயாளிகளின் நிலை மற்றும் சிகிச்சை முறைகள் பற்றியும் விசாரித்தார்.




சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் தங்கி ஆய்வு செய்த அமைச்சர், மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளான அவசர சிகிச்சைப் பிரிவு, வார்டுகள், ஆய்வகங்கள் மற்றும் மருந்தகம் ஆகியவற்றுக்குச் சென்று பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை நேரில் பார்வையிட்டார்.




குறிப்பாக, அதிகாரிகள் யாருமின்றி தனது கார் ஓட்டுநருடன் மட்டும் மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சம்பத், நள்ளிரவு நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டது மருத்துவமனை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



ஆய்வின் போது மருத்துவ சேவைகள் மற்றும் ஒப்பந்த பணிகள் தொடர்பான விரிவான விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.




இந்த திடீர் ஆய்வு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியாக அமைந்துள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...