கற்பகம் பல்கலைக்கழகத்தில் சிறுவர்களுக்கான கோடை பயிலரங்கு நிறைவு விழா நடைபெற்றது

கோவை கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் நிகழ்த்துக் கலைப்புலம் சார்பில் நான்கு வார கோடை கால புத்துணர்வுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மே 29, 2026 அன்று நிறைவு விழா நடைபெற்றது. பாட்டு, நடனம், ஓவியம், இசைக்கருவிகள் ஆகிய துறைகளில் சிறுவர் சிறுமியர் பயிற்சி பெற்றனர்.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் நிகழ்த்துக் கலைப்புலம் சார்பில் நடத்தப்பட்ட நான்கு வார கோடை கால புத்துணர்வுப் பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. மே 29, 2026 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் கற்பகம் கல்விக் குழுமங்களின் தலைவர் Dr. இராச. வசந்தகுமார் தலைமை வகித்தார்.

நிறைவு விழாவில் பேசிய Dr. இராச. வசந்தகுமார், குழந்தைகள் பாட்டு, நடனம், ஓவியம், இசைக்கருவிகள் ஆகியவற்றில் பயிற்சி பெற நிகழ்த்துக் கலைப்புலம் நடத்திய கோடை கால பயிற்சி வகுப்பு சிறந்த வாய்ப்பாக அமைந்ததைப் பாராட்டினார். குழந்தைகள் இளமையில் கற்பது மனதை நல்வழியில் பக்குவப்படுத்தும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் துணைவேந்தர் Dr. சு.இரவி மற்றும் உள்தர உறுதிப்பாட்டு மையத்தின் (IQAC) இயக்குநர் T. சண்முகவேல் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்த்துக் கலைப்புல முதன்மையர், பேராசிரியர் Dr. வெ.ஜனகமாயாதேவி விழாவில் வரவேற்புரையாற்றினார்.

நான்கு வாரங்கள் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் கோவையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சிறுவர் சிறுமியர் பங்கேற்று பயனடைந்தனர். குழந்தைகளுக்கு பல்வேறு கலை வடிவங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

நிறைவு விழாவில் உதவிப்பேராசிரியர் Dr. பிரசீதா பால் நன்றியுரையாற்றினார். கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி குழந்தைகள் கலை பயிற்சி பெற்று சிறப்பித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழாவில் 351 மாணவர்களுக்கு பட்டங்கள்

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 351 மாணவர்களுக்கு பட்டங்கள்...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் சிறுவர்களுக்கான கோடை பயிலரங்கு நிறைவு விழா நடைபெற்றது

கோவை கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் நிகழ்த்துக் கலைப்புலம் சார்பில் நான்கு வார கோடை கால புத்துணர்வுப் பயிற்சி வகுப்பு நடைப...

கோடை விடுமுறை முடிவு: திருப்பூர் பள்ளிகள் திறப்பு - மாணவிகளுக்கு இனிப்பு, ரோஜா பூக்களுடன் வரவேற்பு

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிவில் மாணவிகளுக்கு போலீசார் மற்றும் ஆசிரிய...

சூலூர் சிறுமி வழக்கு: சம்பவ இடத்திற்கு குற்றவாளியை அழைத்துச் சென்று விசாரணை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளி கார்த்தியை சம்பவ இடமான கண்ணம்பாளையம் குள...

கோவையில் மூன்று சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கோவையில் தொண்ட...

காரமடை அருகே பேப்பர் கழிவுகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

கோவை காரமடை அருகே 23 டன் பேப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி, முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இத...