போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - பயணிகள் அவதி


போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தி தனியார் டுரீஸ்ட் பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத் குன்னூர், உதகை, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவது வழக்கம். தற்போது, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலணி பேருந்து நிலையத்தில் இருந்து, நீலகிரிக்கு செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்காததால், தனியார் டூரிஸ்ட் பஸ்கள் நீலகிரி மாவட்டத்திற்கு கோவையில் இருந்து இயக்கப்படுகின்றன. உதகை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேருந்திற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், தனியார் பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். அவசர தேவைகளுக்காக உதகை செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக கோவையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டிகளைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், போதிய அளவு பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான கோவை நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...