கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடுக்கும் கண்காணிப்பு நடைமுறைகள் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்ய நவீன செயல்முறைகள் பின்பற்றுவது தொடர்பாக கலந்தாலோசனை செய்யப்பட்டது.


Coimbatore: கோவையில் தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கம் (IWMA) சார்பில், கழிவுகளை சரியான முறையில் மறுசுழற்சி செய்து மீள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

'கழிவு மேலாண்மையில் நெட் ஜீரோ' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர் பங்கேற்றனர்.

தொடக்க விழாவில், தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்து பேசுகையில், தொழிற்சாலை கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவித்தார். குறிப்பாக, ஆபத்தான கழிவுகளை கையாளுவதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும்,தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க தொழில்துறையினரின் நடவடிக்கைகள் தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கம் சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் சி.ஐ.ஏ. தொழில் அமைப்பின் தலைவர் தேவகுமார், தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கத்தின் துணைத் தலைவர் தியாகராஜன், இணை செயலாளர் நடராஜன் உள்ளிட்ட தொழில்துறை முன்னோடிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழில் சார்ந்த திட்டங்கள், தூய்மையான ஆற்றல் மாற்றம், கழிவிலிருந்து வள மீட்பு, சுற்றுச்சுழல் பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கான நிதி மற்றும் மானிய வாய்ப்புகள் குறித்த சிறப்பு அமர்வுகளும் கருத்தரங்கில் இடம்பெற்றன.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...