வால்பாறையில் காட்டுயானை தாக்கி காவலாளி பலி



வால்பாறை அடுத்துள்ள முருகாளி எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் பாபு (50).  இவர் வழக்கம் போல் நேற்று இரவு எஸ்டேட் மருத்துவமனை அருகாமையில் உள்ள மருத்துவர் குடியிருப்பில் காவல் பணியில் இருந்தபோது நள்ளிரவில் ஒற்றை யானை ஒன்று மெயின் கேட் வழியாக உள்ளே நுழைந்து பாபுவை தாக்கியுள்ளது. 



இதனிடையே, அங்கிருந்த மருத்துவர் யானையின் அழறல் சத்தத்தைக் கேட்டு பயத்தில் வீட்டின் உள்ளேயே இருந்துள்ளார். தொடர்ந்து, மருத்துவர் கைபேசியில் அழைப்பு விடுத்த போது பாபுவின் கைபேசி செயல் இழந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மருத்துவர் அதிகாலையில் வெளியே வந்து பார்த்த போது காலாளி பாபுவைக் காணவில்லை. வீட்டியின் அருகாமையில் இரத்தக்கறை இருப்பதை கண்டவுடன் பொதுமக்கள் உதவியுடன் தேடி பார்த்தபோது அருகாமையில் உள்ள பல்லத்தில் பாபு உடல் முழுவதும் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.



இதுகுறித்து காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுக்கபட்டதைத் தொடர்ந்து, ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் காவல்துறையினர் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மேலும், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, முருகாளி எஸ்டேட் தொழிலாளர்கள் வனவிலங்குகளிடம் இருந்து தங்கள் உடமைக்கும், உயிருக்கும் நிரந்தரமான பாதுகாப்பு வழங்க எஸ்டேட் நிறுவாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...