தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன்னேற்ற சிந்தனை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக் கனவை முன்னெடுக்கும் வகையில், சந்திராபுரம் கிராமத்தில் ஏபிடி சொசைட்டி மற்றும் ஏபிடி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.


Coimbatore: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணைய முறையை ஊக்குவிக்கவும், தாராபுரம் அருகேயுள்ள சந்திராபுரம் கிராமத்தில் ஏபிடி சொசைட்டி மற்றும் ஏபிடி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன்னேற்ற சிந்தனை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக் கனவை முன்னெடுக்கும் வகையில், சக்தி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் ம. பாலசுப்ரமணியம் தலைமையில் இந்த முயற்சி செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ம. பாலசுப்ரமணியம் கூறுகையில், தற்போதைய சூழலில் விவசாயம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதால், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவது அவசியமாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த பண்ணைய முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஏபிடி சொசைட்டி மற்றும் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள், மாதிரி பண்ணைகள், தரமான உள்ளீட்டுப் பொருட்கள் மற்றும் சந்தை சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்கி, ஆண்டு முழுவதும் நிலையான வருமானத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் கூறினார். முதற்கட்டமாக சந்திராபுரத்தை முன்னோடி மாதிரி கிராமமாக உருவாக்கி, அதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த சேவை மையத்தின் மூலம் காய்கறி சாகுபடி, கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர் சாகுபடிகள், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, கோழி, ஆடு, மீன், காளான் மற்றும் தேனீ வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதனுடன், பயிற்சிகள், மாதிரி பண்ணைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.

மேலும், கால்நடைகளுக்குத் தேவையான தரமான தீவனங்கள் மற்றும் உபகரணங்கள் சேவை மையத்தின் மூலம் கிடைக்கச் செய்யப்படுவதுடன், கிராமப்புற குழந்தைகளுக்கான ஒற்றை ஆசிரியர் கல்வி மையங்கள் மற்றும் பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திறன் மேம்பாட்டு திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

துவக்க விழாவிற்கு ம. பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வினோதினி பாலசுப்ரமணியம், சம்யுக்தா சங்கர் வாணவராயர், சுருதி, அம்ரித் விஷ்ணு, நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ஏபிடி சேவை மைய அலுவலர்கள், ஊழியர்கள், சந்திராபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள், ஏபிடி சொசைட்டி மற்றும் சேவை மையத்தின் செயல்பாடுகள் விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதோடு, கிராமப்புற வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து, திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...