ஒப்பணக்கார வீதியில் இன்று நடைபெற்ற ஆய்வில் சுமார் 120 கிலோ அளவில் பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்


கோவை மாநகராட்சியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் ஆகியவைகளை கோவை மாநகராட்சிப் பகுதியில் உற்பத்தி செய்யவும், உபயோகிக்கவும், விற்பனை செய்யவும், கையிருப்புகள் வைத்திருக்கவும் 2017 மே மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.



இத்தடை உத்தரவினை மீறி மாநகராட்சியின் எல்லைக்குள் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்பவர்களும் அவற்றை கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கும், உபயோகிப்பாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நகர்நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் மாநகராட்சியின் 5 மண்டல வார்டு பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது சுமார் 377 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். 

அதனைத் தொடர்ந்து, இன்று காலை 7 மணியளவில் ஒப்பணக்கார வீதியில் நடைபெற்ற ஆய்வின் போது, 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக இருந்த பிளாஸ்டிக் கேரிபேக் சுமார் 120 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் ஆய்வு செய்து பறிமுதல் செய்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...