கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்த சம்பவத்தில், சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆர்.எஸ்.புரம் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU) விடுதியில் உயிரிழந்த பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு மாணவி தர்ணிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ஆர்.எஸ்.புரம் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த தர்ணிகா, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி வந்த அவர், நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் குளிப்பதற்காக விடுதி குளியலறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வகுப்பிற்கு வருவார் என நினைத்த சக மாணவிகள் வகுப்புக்குச் சென்றுள்ளனர்.

தர்ணிகா வகுப்பிற்கு வராததால், பிற்பகலில் விடுதிக்குத் திரும்பிய மாணவிகள், குளியலறை கதவு நீண்ட நேரமாக பூட்டியிருப்பதை கண்டு சந்தேகமடைந்தனர். கதவை உடைத்து பார்த்தபோது, அவர் குளியலறையில் சுயநினைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. விக்கிரவாண்டியில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த மாணவியின் உறவினர்கள், காலை 6.30 மணிக்கு குளிக்கச் சென்ற மாணவியை பிற்பகல் 1.30 மணி வரை யாரும் தேடாதது மிகப்பெரிய அலட்சியம் என குற்றம்சாட்டினர்.

மேலும், தர்ணிகாவுக்கு எந்தவித உடல்நலக் குறைபாடும் இல்லை என்றும், தினமும் இரவு குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி வந்ததாகவும் தெரிவித்த அவர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், இன்று மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...