ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படும் உதவி காவல் ஆய்வாளர் ஜான்சன், அந்த பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளுமாறு தலைமை காவலர் மூலம் பேசிய ஆடியோ வெளியாகி வைரலான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான்சன், ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக வெளியான ஆடியோ பதிவு தொடர்பான புகாரின் எதிரொலியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளத்தொடர்பு தொடர்பான புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த முகேஷ் என்பவரிடம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் பணம் பெற்றது காவல் நிலையத்தில் இருந்தவர்களுக்கு தெரிந்ததால், அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்காக, தலைமை காவலர் நாகராஜன் மூலம் முகேஷை தொடர்புகொண்டு, பெற்ற பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு பேசிய தொலைபேசி உரையாடலின் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு நாகராஜன் வலியுறுத்துவதும், தனக்கு பணம் தேவையில்லை, வழக்கில் இருந்து தன்னை விடுவித்தால் போதும் என்று முகேஷ் கூறுவதும் என இருவரும் மாறி மாறி பேசிக்கொள்ளும் ஆடியோ பதிவாகியுள்ளது.

இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் தலைமை காவலர் நாகராஜன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், தற்போது உதவி ஆய்வாளர் ஜான்சனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிரபுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக காவல்துறையின் துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...