வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24.63 லட்சம் வசூலிக்கப்பட்டது. மேற்கு, வடக்கு, தெற்கு மண்டலங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் கடைகளை நடத்தி வந்த வாடகைதாரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 10 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.




மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாக கடைகளில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த வாடகைதாரர்களுக்கு நிலுவை தொகை செலுத்த கோரி மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், நேரில் சென்று தெரிவித்தும் பலனளிக்கவில்லை. இதையடுத்து, நிர்வாகம் இந்த கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.




மேற்கு மண்டலம் வார்டு எண்.71-க்குட்பட்ட DB Road-ல் 1 கடை, ஆரோக்கியசாமி ரோட்டில் 3 கடைகள், டி.வி.சாமி ரோட்டில் 1 கடை, வார்டு எண்.73-க்குட்பட்ட சுப்ரி வீதியில் 1 கடை என மேற்கு மண்டலத்தில் மொத்தம் 6 கடைகள் சீல் வைக்கப்பட்டன. வடக்கு மண்டலம் வார்டு எண்.2-க்குட்பட்ட துடியலூரில் 2 மட்டன் ஸ்டால்கள் பூட்டப்பட்டன.




தெற்கு மண்டலம் வார்டு எண்.96-க்குட்பட்ட தக்காளி மார்க்கெட்டில் 2 கடைகள் சீல் வைக்கப்பட்டன. இவ்வாறு மூன்று மண்டலங்களில் மொத்தம் 10 மாநகராட்சி வணிக வளாக கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.




இந்த 10 கடைகளின் மொத்த வாடகை நிலுவைத் தொகை ரூ.54,38,988 ஆகும். மேற்கண்ட நடவடிக்கையின் மூலம் இதுவரை ரூ.24,63,577 வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




மாநகராட்சி வணிக வளாகங்களில் கடை நடத்தும் வாடகைதாரர்கள் சரியான நேரத்தில் வாடகை செலுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் இதுபோன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Newsletter

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...