தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டிய தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு, ஜூலை 31 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலவரையற்ற கறிக்கோழி விற்பனை நிறுத்தம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.


Coimbatore: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனையை காலவரையற்ற முறையில் நிறுத்துவதாக தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் தீவனக் கட்டுப்பாடு தொடர்பான நடைமுறைகளை முறையாக பின்பற்றாததால், சில்லரை விற்பனையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விற்பனையாளர்கள் கூறுகையில், கறிக்கோழிகளை விற்பனை செய்வதற்கு சுமார் 12 மணி நேரத்திற்கு முன்பாக தீவனக் கட்டுப்பாடு நடைமுறையை கடைபிடிக்க வேண்டிய நிலையில், அது முறையாக அமல்படுத்தப்படாததால் கோழிகளின் எடையில் மோசடி ஏற்பட்டு, விற்பனையாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். இந்த எடை மோசடியைத் தடுக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும் கூறினர்.

மேலும், கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்த மற்றும் சில்லரை கறிக்கோழி விற்பனையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...